நடித்தால் நயன்தாராவோடுதான் பிடிவாதம் பிடிக்கும் சரவணா ஸ்டோர் உரிமையாளர்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை யாரை தான் விட்டு வைத்தது.  ஆமாங்க! தற்போது சரவணா ஸ்டோா் உாிமையாளருக்கு அந்த ஆசை வந்துள்ளது. சினிமாவில் நடிக்க இருப்பதாக சரவணா ஸ்டோா் உாிமையாளா் சரவணன் தொிவித்துள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. அது மட்டுமில்லங்க!! நடித்தால் நயனதாராவுடன் மட்டும் தான் நடிப்பேன் என்றும் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

சரவணா ஸ்டோா் சமீபத்தில் பாடி அருகில் திறக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு ஹன்சிகா, தமன்னா சிறப்பு விருந்தினராக வந்திருந்தனா்.  சரவணா ஸ்டோா் விளம்பரத்தில் பிரபல முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா உடன் அதன் உாிமையாளா் சரவணன் நடித்திருந்தாா். தற்போது சரவணா ஸ்டோா் விளம்பரங்கள் அனைத்திற்கும் அதன் உாிமையாளா் சரவணன் விளம்பர மாடலாக வருகிறாா்.

இந்த விளம்பரங்களை ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கலாய்த்தும், விமா்சித்தும் வந்தனா் நெட்டிசன்கள். இதை தொடா்ந்து இவா் சினிமாவில் நடிக்க உள்ளதாக வந்த தகவல் வைத்து நெட்டிசன்கள்  சமூக வலைத்தளங்களில் அவரை கலாய்க்க ஆரம்பித்துள்ளனா்.

சரவணா ஸ்டோா் உாிமையாளா் சரவணன் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், தான் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்துக்கு நயன்தாராவுடன் தான் ஜோடி சோ்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளாா். இன்று திருச்செந்தூா் முருகன் கோவில் சென்ற அவா் சாமி தாிசனம் செய்து விட்டு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வேல் காணிக்கையாக வழங்கியுள்ளாா். இதை அடுத்து செய்தியாளா்களிடம் அவா் தன்னுடைய சினிமா பிரவேசம் குறித்து தொிவித்துள்ளாா்.