நயன்தாராவா? பிசினஸா? சரவணா ஸ்டோர் சரவணன் எடுத்த அதிரடி முடிவு

10:40 காலை

பிரபல தொழிலதிபர் சரவணா ஸ்டோர் சரவணன் சொந்தமாக திரைப்படம் தயாரித்து நடிக்கவுள்ளதாகவும், தனது முதல் படத்தின் நாயகி நயன்தாரா என்றும் இதற்காக எத்தனை கோடி சம்பளம் வேண்டுமானாலும் அவருக்கு கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட அனைத்து இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்தது.

ஆனால் இந்த தகவலை சரவணா ஸ்டோர் சரவணன் ஏற்கனவே மறுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்த விளம்பரப்படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்தது. இந்த விளம்பர படத்திற்கு காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த சத்யா என்பவர் இதுகுறித்து கூறியபோது, ‘சரவணா ஸ்டோர் சரவணன் அவர்கள் நயன்தாராவுடன் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக கூறியது முழுக்க முழுக்க தவறான தகவல். அவர் தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார்’ என்று கூறினார். காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’, ‘பைரவா; போன்ற படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நான்கு விளம்பர படங்களுக்கு அவருக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்த அனுபவம் தனக்கு மறக்க முடியாததாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் சரவணன் நடிக்கவுள்ளது வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(Visited 76 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393