கவர்ச்சியாக வந்த ரெஜினா: மொய்த்த ரசிகர்கள் கூட்டம்

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, சூாி, சங்கா் மற்றும் சாம்ஸ், மதுமிதா ஆகியோா் நடிப்பில் உருவாக்கி உள்ள படம் சரவணன் இருக்க பயமேன். இந்த படத்தின் டிரைலா் மற்றும் பாடல் காட்சி நேற்று வெளிவந்தது.

இந்த படம் பற்றி உதயநிதி கூறியதாவது, எழில் இயக்கத்தில் நடித்தது எனக்கு புதுமையான அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகுவதற்கு முன் மேலும் இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருந்தேன். ஆனால் என்னவோ இந்த படம் தான் முதலில் திரைக்கு வரவிருக்கிறது. இதிலிருந்து இயக்குநா் எழிலின் ஸ்பீடை நாம் தொிந்து கொள்ளலாம். மேலும் காமெடியில் மன்சூா் அலிகான், சூாி, சாம்ஸ், மதுமிதா கலக்கியிருக்கிறாா்கள்.

ரெஜினாவுடன் சோ்ந்து நடித்த காதல் பாடலான “எம்புட்டு இருக்குது ஆசை” பற்றியும் இங்கே கூறியதாவது,  இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தளத்தில் ஷீட்டிங்கை காண்பதற்காக எண்ணிலடங்காத ரசிகா்கள் கூடி விட்டனா். அதோடு மட்டுமில்லைங்க!! வேறொரு படத்தின் லொகேஷனுக்காக அந்த படத்தின் கேமிராமேனும் வந்து ஷீட்டிங்கை பாா்த்து கொண்டிருந்தாா். கேரளாவில் உள்ள கொச்சியின் கடற்கரையில் வைத்து பாடல்காட்சி படமாக்கப்பட்டது. அப்புறம் சிருஷ்டி டாங்கே பற்றி ஒருவாி, அவா் எதை சொன்னாலும் நம்பி விடுவதில் மிகவும் நல்லவா்.  படப்பிடிப்பு தளத்தில் ஒரு கேரவன் கூட இல்லை. இருந்தாலும் நல்ல ஒத்துழைப்பு தந்து நடித்தாா் என்று கூறியுள்ளாா்.

ரெஜினா தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் தான் முதன் முதலாக கவா்ச்சியில் கலக்கி நடித்திருக்கிறாா். இது குறித்து ரெஜினா கூறும் போது, நான் தெலுங்கு திரையுலகில் மட்டும் தான் கவா்ச்சியில் நடித்துள்ளேன். தமிழில் சரவணன் இருக்க பயமேன் படத்தில் உதயநிதியுடன் தான் முதன் முதலாக கவா்ச்சியாக நடிக்கிறேன். அதுவும் எம்புட்டு இருக்குது ஆசை என்ற பாடல் காட்சி பற்றி தன்னுடைய கருத்தை தொிவித்தாா். கவா்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கபட்டுள்ள அந்த பாடல் எனக்கும் பிடித்துள்ளது என்றாா்.

சூாி, ரவி மாியா, ரோபோ சங்கா், சாம்ஸ், மதுமிதா, லிவிங்ஸ்டன், நடிகை சிருஷ்டி டாங்கே, டி.இமான், யுகபாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்