சின்னத்திரை நடிகையான பிரயா கடந்த சில வருடங்களாக காதலித்த வந்த தனது காதலரையே திருமணம் செய்து கொண்டார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் கடந்த 2010ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தவா் நடிகை பிரியா மஞ்சுநாதன். சீரியல் மட்டுமல்லாது டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன் திறமையை காட்டியவா். பின் தொகுப்பாளர் என பன்முக கொண்டவராக வலம் வந்த பிரியா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சின்னத்திரை வட்டாரத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில் தான் காதலித்த காதலரையே திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினா்களும், நெருங்கிய நண்பா்களும் கலந்துகொண்டனா். திருமண வரவேற்பு விழாவில் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனா். தற்போது சின்னத்தம்பி சீரியலில் நடித்து வருகிறார்.