பாகிஸ்தான் அணி தொடர்ந்து மோசமாக விளையாடினால் நாட்டுக்குள் மக்கள் விடமாட்டார்கள் என பாக். கேப்டன் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரில் நடந்த போட்டில் இந்திய அணி அபாரமாக ஆடி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7 முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றிக்குப் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணிக்கோ கடுமையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

இந்தியாவுடனான தோல்வி மட்டுமல்லாமல் இந்த தொடர் முழுவதுமே மோசமாக விளையாடி பாகிஸ்தான் 9 ஆவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி அரையிறுதிக்கு செல்வது கடினம்தான் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பாக். கேப்டன் சர்பராஸ் அகமது பாகிஸ்தான் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘இது போல மோசமாக விளையாடினால் மக்கள் நம்மை நாட்டுக்குள் விடமாட்டார்கள். ஏதோ துரதிர்ஷடமாக நடக்கப்போகிறது என்பதற்காக கடவுள் சில விஷயங்களைத் தடை செய்துள்ளார்.  அதனால் நாம் நாட்டுக்கு செல்ல வேண்டுமானால் மோசமான விளையாட்டைக் கைவிட்டு சிறப்பான ஆட்டத்தை விளையாட வேண்டும்’ எனப் புலம்பித் தீர்த்துள்ளார்.