விஜய் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் சர்கார். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தினை சன் பிச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. தீபாவளி வெளியீடான இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அக்.2ம் தேதி தாம்பரம் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

ரசிகர்கள் அதிக அளவு கலந்துகொள்ள வாய்ப்புள்ளதால் முதலில் நேரு உள் விளையாட்டு அரங்கம்,ஒய்.எம்.சி ஸ்டேடியம் என பல இடங்களை பார்த்தனர் . ஆனால் அனுமதி கிடைக்காததை அடுத்து தாம்பரம் அருகே கல்லூரியை தேர்வு செய்தனர். ஆனால் கல்லூரி வளாகம் சிறிய இடம் என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடையகூடாது என்பதற்காக சன் தொலைக்காட்சியில் முழு நிகழ்ச்சியையும் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள். இது குறித்த் அறிவிப்பையும் சன் டீவி வெளியிட்டுள்ளது.