அரசியலில் குதித்த விஜய்: கசிந்த விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை!

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியான அன்றே சர்ச்சைகள் எழுந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது.

சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் தற்போது நடக்கும் அரசியல் குறித்த பல காட்சிகள் உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பில் உள்ளனர் அவரது ரசிகர்கள். இதில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் சர்கார் படத்தின் கதை இது தான் என்ற புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருக்கும் விஜய் ஒரு தேர்தலின்போது தனது ஓட்டுரிமையை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வருகிறார். ஆனால் அவர் வந்த விமானம் தாமதமானதால் அவரது ஓட்டை திருட்டுத்தனமாக ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் போட்டுவிடுகிறார்கள். இந்த சம்பவத்தால் உந்தப்பட்ட விஜய் அரசியலில் குதித்து புரட்சி செய்கிறார் என்பதே படத்தின் கதை.

சர்கார் படத்தில் முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு மற்றும் வில்லனாக அரசியல்வாதியாக பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.