சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து நேற்று வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3400 தியேட்டர்களில் வெளியானது. இந்த படம் பல்வேறு வசூல் சாதனைகளை செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் சர்கார் உலகம் முழுவதும் 70 கோடி கலெக்ஷனைஅள்ளியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 30 கோடியை வசூலித்திருக்கிறது. இது மெர்சல் படத்தின் கலெக்‌ஷனை விட அதிகமாகும். மெர்சல் வெளியான முதல் நாளில் ரூ. 24.8 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.