ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்
உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்
நிறுவனம்’ தயாரிக்கிறது. இதில், கீர்த்தி சுரேஸ், வரலட்சுமி
சரத்குமார், யோகபாபு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள்
நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அனைத்து
பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  கேரளா மழை வெள்ளம்: நடிகர் விஜய் எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள்
முடிவடைந்து வரும் நிலையில், இப்படம் ஆரம்பம் முதலே
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், படத்தின் தயாரிப்புக் குழு இன்று காலை
முக்கிய விஷயத்தை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தனர்.
அதாவது, படத்தின் சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 24ம் தேதி 6
மணியளவில் வெளியாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  அரசியலில் குதித்த விஜய்: கசிந்த விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை!

தயாரிப்பக்குழுவின் இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.