தமிழ்ராக்கர்ஸ் நேற்று அறிவித்தவாறே சர்கார் வெளியான இன்றே அதனை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது.

பல்வேறு சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்பாடுகளுக்கும் இடையே முருகதாஸின் சர்கார்   தீபாவளியான இன்று வெளியாகி இருக்கிறது. விஜய் நடித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் படத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று தமிழ்ராக்கர்ஸ் டிவிட்டரில் சர்க்ர் திரைப்படத்தை நாளை(அதாவது இன்று) ஹெச்.டி பிரிண்டில் வெளியிடுவோம் என பதிவிட்டிருந்தது. இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிந்தால் செய்து பாருங்கள் என சவால் விடுத்திருந்தது. இன்று காலை மீண்டும் தமிழ் ராக்கர்ஸ் சர்கார் திரைப்படத்தின் ஹெச்.டி பிரிண்டை விரைவில் வெளியிடுவோம் என டிவிட்டரில் பதிவிட்டது.

சொன்ன மாதிரியே தமிழ்ராக்கர்ஸ் சற்று நேரத்திற்கு முன்பாக சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.