சற்று நேரத்திற்கு முன்னர் வெளியான சர்க்கார் படத்தின் சிங்கில் டிராக் பாடல் மொக்கையாக இருப்பதாக விஜய் ரசிகர்களே கூறி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘சர்கார்’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் படத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  சர்காருக்கு அவ்வளவு சீன் வேணாம்: பிரபல எழுத்தாளர் பரபரப்பு பேட்டி

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 2 ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடல் ‘சிம்டங்காரன்’  இணையத்தில் வெளியாகியது. இப்பாட்டு ஆளபோறான் தமிழன் பாடல் ரேஞ்சுக்கு இருக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. ஏனென்றால் பாடல் சுமார் தான் என விஜய் ரசிகர்களே கூறுகின்றனர். பாடல் வரிகள் கூட பல பேருக்கு புரியவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள்  கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.