ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம்
‘சர்கார்’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும், படத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகி
பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் விஜய், ஏ.ஆர் ரஹ்மான் 4-வது முறையாக
கூட்டணி அமைத்துள்ளனர். இந்த படத்தின் வௌயீட்டு விழா
அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், ‘சன் பிக்சர்ஸ் நிறுவனம்’ ‘சிம்டாங்காரன்’
என்ற சிங்கிள் ட்ராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என
தெரிவித்து இருந்தது. இதற்கிடையில் ‘ சிம்டாங்காரன்’ என்ற
வார்த்தைக்கு ‘ கவர்ந்து இழுப்பவன்’, ‘பயமற்றவன்’,
‘துடுக்கானவன்’ இவைகள்தாம் அர்த்தம் என்று பாடலாசிரியர்
விவேக் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

தற்போது, சன் நெக்ஸ்ட் ஆப்பில் இப்படத்தின் ‘ சிம்டாங்காரன்’
பாடல் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப்
பகிரப்பட்டு வருகிறது. இப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த
உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.