ஆளும் அதிமுக அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்த சர்கார் படக்குழு படத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக் காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘சர்கார்’  திரைப்படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொதித்து போன அமைச்சர்கள் பலர் விஜய், இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளனர்.

மேலும் பல இடங்களில்அதிமுகவினர் சர்கார் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி தியேட்டர் முன் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை கிழித்து ரௌடி தனம் பண்ணி வந்தனர்.

இந்நிலையில் சற்று முன்னர் மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர், ‘திருப்பூர்’ சுப்பிரமணியம் சர்காரால் தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தை பட தயாரிப்பாளரிடம் தெரிவித்தோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும் என முடிவு செய்து நாளை முதல் படம் திரையிடப்படும் என சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.