Saroja devi

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அடுத்த எம்.ஜி.ஆர் என பழம்பெரும் நடிகை சரோஜா தேவி கூறியுள்ளது கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

சென்னையில் 14வது திருவையாறு நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார்.

அந்த விழாவில் பேசிய நடிகை சரோஜாதேவி “நான் பல முதல்வர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புன்னகை தவழ்ந்த முகத்துடன் இருக்கிறார். கலைஞர்களை கவரவிக்கும் நல்ல எண்ணம் அவருக்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர் போல அவர் பலருக்கும் அவர் உதவி செய்ய வேண்டும். எப்போதும் அவரே முதல்வராக இருக்க வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன்” எனப்பேசினார்.

இதையடுத்து, உனக்கு என்னமா சொல்லிட்டு நீ கர்நாடகாவுக்கு போய்டுவே. நாங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.