பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக தனக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்களால் ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்த தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறாஅர். இந்த நிலையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் சம்பவங்கள் நடிகைகளின் ஒப்புதலுடன் தான் நடந்து வருவதாகவும், எந்த நடிகையும் பலாத்காரம் செய்யப்படுவதில்லை என்றும் பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: “பாலியல் தொந்தரவு, வன்கொடுமை என்பது சினிமாவில் மட்டுமில்லை, அரசுத் துறைகளிலும் இருக்கிறது. மற்ற துறைகளை பொருத்தவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, கைவிட்டு விடுவார்கள் என்றும், ஆனால் சினிமாவில் வாய்ப்புக்காக இணங்கிச் சென்றால், வேலைவாய்ப்பாவது கிடைக்குமே… பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் தான் அத்தகைய பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று சரோஜ் கான் கூறியுள்ளார்
சரோஜ்கானின் இந்த கருத்துக்கு திரையுலகில் உள்ள பலர் கண்டனம் தெரிவித்தாலும் ஒருசிலர் ஆதரவு கொடுத்துள்ளனர். பல நடிகைகள் தாங்களாகவே பாலியலுக்கு சம்மதித்து வாய்ப்புகளை தேடி கொள்வதாகவும், பின்னர் மார்க்கெட் இழந்ததும் பாலியல் தொல்லை என்று புகார் கூறுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.