இயக்குனர் ராஜிவ் மேனன் மின்சாரக்கனவு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறியப்பட்ட இயக்குனர் இவர்.

அதன் பிறகு கண்டு கண்டு கொண்டேன் திரைப்படம் இயக்கினார். இவர் இந்த படத்தை இயக்கியே 18 வருடங்களுக்கு மேலாகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் சர்வம் தாளமயம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் 31ல் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெறும் இண்டர்நேஷனல் திரைப்படவிழாவில் கலந்துகொள்கிறது.