சர்வம் தாளமயம் படத்தில் ரிலீஸ் தேதி தள்ளி தள்ளி போய் கொண்டிருக்கிறது.

இசையமைப்பாளரான ஜு.வி.பிரகாஷ் நடிகராக மாறி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், ஒரு சில படங்களை தவிர உருப்படியான படங்கள் அவருக்கு அமையவில்லை.

இந்நிலையில்தான், 18 வருடங்கள் கழித்து ராஜீவ் மேனன் இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியாக வந்திருக்க வேண்டிய சர்வம் தாளமயம் தற்போது அடுத்த மாதம் 25ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. உண்மையில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வரவேண்டிய இப்படம், மாரி2, சீதக்காதி, கானா, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்கள் வந்ததால் அவைகளோடு போட்டியிட முடியாது என தள்ளிப் போனது.

இதில் ஒரு சோகம் என்னவெனில், ஜி.வி.பிரகாஷ் நடித்த 100 % காதல் படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியிட அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, சர்வம் தாளமயம் மீண்டும் தள்ளிப்போய் 2 படங்களும் ஒன்றாக வெளியாகும் சூழ்நிலை ஏற்படுமோ என ஜு.வி. பிரகாஷ் பயப்படுகிறாராம்.