இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக சூர்யா இண்டர்வியூ எடுக்கும் ஒரு காட்சியில், ஒரு பெண் இந்தநாட்டில் ஊழல் ஒழிய வேண்டும், எல்லோருக்கும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்’ என்று கூறுவார் சூர்யா அவரிடம் உங்கள் பேர் என்ன என்று கேட்கும்போது அவர் ‘சசிகலா’ என்று கூறுவார். இந்த காட்சியில் திரையரங்கமேஅதிரும்

அதேபோல் சிபிஐ என்பதன் விரிவாக்கம் என்ன என்று சூர்யா கேட்கும்போது பெரும்பாலானோர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்று பதில் கூறுவார்கள். இந்த காட்சியும் அனைவரும் கவர்ந்த காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.