சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு வரும் அக்டோபர் 4-ஆம் தேதி குருப்பெயர்ச்சி வர உள்ளதால் அவர் உற்சாகத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் அவருக்கு வரும் 18-ஆம் தேதி பிறந்தநாள் வரவுள்ளது. சசிகலாவுக்கு மீனம் ராசி, ரேவதி நட்சத்திரம். இதனால் அக்டோபர் 4-ஆம் தேதி அவருக்கு குருப்பெயர்ச்சி. குரு 9-வது இடத்துக்கு வருகிறார். இதனால் சசிகலாவுக்குச் சிறப்பான கால நேரம் கூடி வருகிறது. செல்வாக்கு உயர்ந்து பதவி தேடி வரும். மேலும் எதிரிகளும் ஒதுங்குவர் என அவரது ஜோதிடம் கூறுகிறது.

ஆடி அம்மாவாசை அன்று சிறையில் விரதம் இருந்த சசிகலா தற்போது உற்சாகத்தில் இருப்பதாகவும், வரும் 18-ஆம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் இனிப்போடு கூடிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று மாதத்திற்குள் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது திமுகவோ அல்லது அமமுகவோ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறும் சசிகலா வட்டாரம் அதன் பின்னர் மீண்டும் அதிமுக சசிகலாவிடம் வரும் என உற்சாகத்துடன் கூறுகின்றனர்.