சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி கர்நாடகாவில் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தை விதிகள் காரணமாக விடுதலை ஆக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க பாஸ்-  டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது - தேர்தல் ஆணையம் அதிரடி

சசிகலா விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையில் இரண்டரை ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் சிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுப்பது குறித்து கர்நாடக சிறைத்துறை அம்மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  யாருயா அந்த 7 பேர்? மீண்டும் சிக்கலில் சிக்கிய ரஜினி!!

சிறை விதிகளை மீறியதாகவும், சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் சென்றதாகவும் சசிகலா மீதும் கர்நாடகா சிறைத்துறை மீதும் கர்நாடகா முன்னாள் டிஜிபி ரூபா அவர்கள் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது. அப்படி சிறை விதிகளை மீறியவரை எப்படி நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.