Home அரசியல் சந்திக்க மறுத்த சசிகலா: தினகரனுக்கு எதிராக பல்பு வாங்கிய விவேக்!

சந்திக்க மறுத்த சசிகலா: தினகரனுக்கு எதிராக பல்பு வாங்கிய விவேக்!

டிடிவி தினகரனுக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் சசிகலாவை சந்தித்து புகார் அளிக்க பெங்களூர் சென்றதாகவும், சசிகலா அவரை சந்திக்க மறுத்ததால் மீண்டும் சென்னைக்கு திரும்பியதாக தகவல்கள் வருகின்றன.

நாங்கள் 18 பேரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என தங்க தமிழ்ச்செல்வம் ஊடகத்தினர் முன்னிலையில் கூறினாலும், தினகரனுக்கு அவருக்கும் இடையே புகைச்சல் இருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை வாபஸ் வாங்கலாம் என்ற தினகரனின் ஆலோசனையை ஏற்ற தங்க தமிழ்ச்செல்வன், அடுத்த நாள் தான் இடைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என கூறி தினகரனுக்கு அதிர்ச்சியளித்தார். இப்படி தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் உள்ள கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி விவேக் உள்ளே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு தொலைப்பேசி எண்ணை கொடுத்து சசிகலாவை சந்தித்து தினகரனுக்கு எதிராக புகார் கொடுங்கள் என தங்க தமிழ்ச்செல்வனை விவேக் பெங்களூர் அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட தங்க தமிழ்ச்செல்வன் சசிகலாவை பார்க்க விரும்புவதாக கூறினார். அது வழக்கறிஞர் தொலைப்பேசி எண். அவர் சசிகலாவிடம் கேட்டு சொல்கிறேன் என கூறியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து எந்த அழைப்பும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வரவில்லை.

வழக்கறிஞர் சசிகலாவிடம் தகவல் சொன்னபோது தினகரன் அனுப்பி வைத்தாரா என்று விசாரித்துள்ளார். இல்லை என்றதும் தங்க தமிழ்ச்செல்வனை சந்திக்க சசிகலா மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் டென்ஷனான விவேக் புகழேந்தியை அனுப்பி தங்க தமிழ்ச்செல்வனை சென்னைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. தினகரனுக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் மூலம் சசிகலாவிடம் காய் நகர்த்திய விவேக்கிற்கு இது பெரிய பல்பாக பேசப்படுகிறது.