சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவரது பிறந்தநாள் நேற்று முன்தினம் அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் அவரை நேரில் சென்று பார்த்து வாழ்த்து தெரிவிக்க டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா, தினகரனின் மகள், மற்றும் நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரன் அவரது மனைவி, மகள், ராஜராஜன் அவரது மனைவி ஷகிளா, சசிகலா உதவியாளர் கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் அசோகன், சுரேஷ் ஆகியோர் பரப்பானஅக்ரஹார சிறைக்கு சென்றனர்.

அப்போது அவர்களிடம் சசிகலா கருணாநிதி மறைவு குறித்து பேசியதாகவும் தனது திருமணத்தை கருணாநிதி தான் நடத்தி வைத்ததாகவும் தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது சசிகலாவிடம் பேசிய தினகரன், கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த போன தகவல்களை எல்லாம் சொல்லியிருக்கிறார். அப்போது, மெரினாவில் இடம் கொடுக்காதது சம்பந்தமாகவும் தினகரன் சொல்லியிருக்கிறார். இதற்கு பதிலளித்த சசிகலா, அக்கா இருந்திருந்தால் இடம் கொடுத்திருப்பாங்க. இதுல கூடவா எடப்பாடி அரசியல் செய்யுறாரு? அசிங்கமா இருக்கு. இவங்களை எல்லாம் நம்பி மோசம் போய்ட்டேன்னு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.