மீண்டும் இணையும் சசிகுமார்-சமுத்திரக்கனி

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்

இந்த படம் கடந்த 80களில் நடந்த கதை என்றும், பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் 80களின் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்ரும் கூறப்படுகிறது.

சசிகுமார், சமுத்திரக்கனி இணைந்து பணிபுரிந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படமும் அந்த வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது