சசிகுமார் தற்போது ‘அசுரவதம் மற்றும் நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இன்னும் ஒருசில மாதங்களில் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ‘குற்றம் 23’, ‘தடம்’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி அவரே இந்த படத்தின் வில்லனாகவும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ள இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க ஒரு புதுமுகம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், கல்லூரி மாணவியான இவருக்கு இந்த படத்தின் அறிமுகம் நல்ல எண்ட்ரியை கொடுக்கும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகையும் முக்கியவேடத்தில் நடிக்கவுள்ளாராம்.