பிரபல நடிகர்,தயாரிப்பாளர் இயக்குனருமான சசிக்குமாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர் கதிர் அவர்கள்.

சசிக்குமார் அவர்கள் இயக்கிய சுப்பிரமணியபுரம் தொடங்கி, தற்போதைய சசிக்குமார் நடிப்பில் அசுரவதம் வரை பல படங்களுக்கு இவரே ஒளிப்பதிவாளர்.

சுப்பிரமணியபுரம் படத்தில் 80களில் இருக்கும் தெரு, வீடு போன்றவற்றை சிறப்பாக காண்பித்ததில் இவரது கேமரா முக்கிய பங்கு வகித்தது.

இந்நிலையில் திரைக்கு வந்து வேகமாக ஓடி கொண்டிருக்கும் அசுரவதம் படத்தின் ஒளிப்பதிவு நெட்டிசன்களால் அதிகம் பாராட்டப்படுகிறது.

குறிப்பாக சோளக்காடு,கரும்புக்காடு என இரவு நேர காட்சிகளை அழகான லைட்டிங் வைத்து எடுத்திருக்கும் விதம் வியக்க வைப்பதாக உள்ளது என பல நெட்டிசன்கள் எஸ்.ஆர் கதிரை பாராட்டி வருகின்றனர்.

இப்படி பாராட்டு ஒரு பக்கம் இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவு வரவில்லை . படம் நல்ல கதை சொல்ல வருகிறார்கள் என ஆரம்ப காட்சிகளில் தெரிந்தாலும் காட்சிகள் செல்ல செல்ல தொய்வடைகிறது.

இதற்கு சசிக்குமாரின் கதை தலையீடும், இயக்குனர் மருதுபாண்டியன் இயக்க வேண்டிய பல காட்சிகளை தனது நண்பரான எஸ்.ஆர் கதிரை வைத்து இயக்கி விட்டதாக படக்குழுவினர் ரகசியம் தெரிவித்ததாக நாளிதல்களில் செய்திகளை காண முடிகிறது.