ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் சதா. அதில் அவர் பேசும் போயா என்ற வசனம் பலராலும் விரும்பப்பட்டது. திடீரென கவர்ச்சிக்கு மாறிய அவர் சரியான படங்களை தேர்வு செய்யவில்லை. எதிரி,பிரியமானவளே என தோல்வி படங்களையே கொடுத்தார். பின் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் நடித்தார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து முன்னனி இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் வடிவேலுக்கு ஜோடியாகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தற்போது ஒரு பாட்டுக்கு ஆடுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருப்பது என்று பிஸியாக இருக்கும் சதா, மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். அதுவும் பாலியல் தொழிலாளி வேடம். டார்ச் லைட் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், புதுமுகம் உதயா, ரித்விகா, ஏ.வெங்கடேஷ், சுஜாதா ஆகியோர் நடிக்கின்றனர்.