ஆா்யாவை பார்த்தாலே எல்லாராலும் கேட்கப்படும் ஒரு கேள்வி என்னவென்றால் எப்போது திருமணம் என்பது தான். அண்மையில் ஆா்யா தான் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் அதற்கு விரும்ப உள்ள பெண்கள், இந்த நம்பருக்கு தொடா்பு கொள்ளவும் என ட்விட்டா் தெரிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பு வந்தவுடனே ஆயிரக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்திருந்தனா். அது எதற்கு என்றால் புதியதாக துவங்கப்பட்ட தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி நிகழ்ச்சியாக தான் என்பது தெரியவந்துள்ளது. டிவி நிகழ்ச்சியாக பெண் தேடும் படலம் நடத்தி வருகிறார். இது புதியதாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த தொலைக்காட்சியின் விளம்பர தூதராகவும் இருக்கிறார் நடிகா் ஆா்யா.

இந்நிலையில் ஆா்யா எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் அவரது நண்பா்கள் சமூகவலைதளங்களில் இதுகுறித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். இதுகுறித்து பலரும் அவரை கலாய்த்து வருகிறார்கள். காமெடி நடிகா் சதீஷ் சமீபத்தில் இதுபற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார். அவா் ஆா்யாவை கலாய்த்து, ஆா்யா டார்லிங் சும்மாவே இததான் செஞ்சிட்டு இருந்தீங்க. இப்போ இந்த வேலைக்கு காசு வேற தராங்க என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆா்யா, அடுத்த சீசன் ல நீங்களும் வந்திடுங்க. நான் ரெக்கமண்ட் பண்ணிருக்கேன். அதற்கான பயிற்சியை இப்போதே இருந்து ஆரம்பித்து விடுங்கள் என கூறியுள்ளார்.