Pollachi college girl murder – பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமாரின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாசியில் பிரகதி என்கிற கல்லூரி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகதி 4 ஆண்டுகளாக உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். எனவே, இருவீட்டாரும் அதை ஏற்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தனர். வருகிற ஜூன் மாதம் அவர்களின் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்தான் பிரகதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய அவரை 2 பேர் காரில் கடத்தி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

பிரகதிக்கு உறவினரான சதீஷ் பிரகதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவரது பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால், படிப்பை காரணம் காட்டி அதை அவர்கள் ஏற்கவில்லை. மேலும், பிரகதி விரும்பிய வெறொரு உறவினருக்கு அவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. இந்நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

போலீசாரிடம் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், எனக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் எனக்கூறிவிட்டு அவனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், என் நண்பனுடன் சேர்ந்து பிரகதியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து அவளை கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார்.

பிரகதியை பெண் கொடுக்க மறுத்ததும், சதீஷ்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஆத்திரத்தில் இந்த கொலையை சதீஷ் செய்துள்ளான்.