இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்பும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. அவற்றில் ஒன்று ஜிஎஸ்டி குறித்து விஜய் பேசிய வசனத்திற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது

ஆனால் அதே பாஜக கட்சியை சேர்ந்த சத்ருஹன்சின்ஹா, விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கட்சியில் அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியது.

இந்த நிலையில் சத்ருஹன்சின்ஹா தனது வீட்டின் மொட்டை மாடியில் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டிய கழிவறையை இன்று காலை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். ஆளுங்கட்சி எம்பி ஒருவரின் வீட்டில் நடந்த இந்த நடவடிக்கை சத்ருஹன் சின்ஹா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்