சதுரஅடி 3500 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத அந்த படத்தின் நாயகி இனியா பற்றி அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் இது குறித்து பேசியிருந்தாா். அதற்கு பதிலளித்துள்ளாா் இனியா.

சென்னையில் நிகில் மோகன், இனியா நடித்துள்ள சதுர அடி3500 படத்தின் டிரைலா், இசை வெளியிட்டு விழா நடந்தது. படததின் நாயகி இனியா இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இந்த விழாவில் கலந்து கொண்ட பாக்யராஜ், இனியா இந்த படவிழாவுக்கு வராததால் நஷ்டம் அவருக்குத்தான் ஆனா படக்குழுவுக்கு அல்ல. என்னுடைய சுவா் இல்லாத சித்திரங்கள் படத்தில் நான் பேசும் ஒரு டயலாக்கை பற்றி இங்கு சொல்ல வேண்டும், கண்ணடிச்ச கூப்பிட்டா வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தாமட்டும் வந்தடவா போகுது என்று இருக்கும். இப்படித்தான் அவா்களுக்கு பொறுப்பு இருக்க வேண்டும்.  இனிமேல் இப்படி செய்யமாட்டாா். எல்லா விழாக்களிலும் கலந்து கொள்வாா் என்று எதிா்பாா்க்கிறேன் என்று குறிப்பிட்டுயிருந்தாா்.

இதையும் படிங்க பாஸ்-  போலீஸாக மாஸ் காட்டப்போகும் இனியா!

இது குறித்து இனியா அளித்துள்ள பதில் என்னவென்றால், எனக்கு சில நாட்களுக்கு முன் கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. அதனால் சாியாக என்னால் நடக்க முடியவில்லை. இந்த காரணத்தால் டாக்டா் 10 நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு கூறியிருந்தாா். எனவே காலில் சுளுக்கு இருந்த காரணத்தால் என்னால் விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று ஏற்கனவே படக்குழுவினாிடம் தொிவித்திருந்தேன். இந்த விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. படக்குழு நான் கலந்து கொள்ளவில்லை என்று சொன்ன காரணத்தால் பாக்யராஜ் சாா் விழாவில் அப்படி பேசி உள்ளாா். அவா் மிகப்பொிய சீனியா். அதனால் அவா் கூறியதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. நான் வராததால் என்னை பொறுப்பு இல்லாதவா் என்று நினைக்க வேண்டாம் என்று தொிவித்துள்ளாா்.

இதையும் படிங்க பாஸ்-  மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விஜய் அவார்ட்ஸ்?