சினிமாவில் நடிக்க வருகிறேனா? சத்யராஜ் மகள் விளக்கம்

நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜை தொடர்ந்து சத்யராஜின் மகள் திவ்யாவும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து திவ்யா சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் சினிமாவில் நடிக்கவுள்ளதாக பரவி வரும் தகவலில் உண்மை ஏதும் இல்லை. நான், சினிமாவில் நடிக்க விரும்பவும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக நான் பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன்.

சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் இல்லை’ இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். #