அரசியல் களத்தில் மீண்டும் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் நிஜ அரசியலுக்கு வராவிட்டாலும் அவருடைய பல படங்கள் அரசியல் பேசும். குறிப்பாக அமைதிப்படை, சுயேட்சை எம்.எல்.ஏ, நாகராஜசோழன் ஆகிய படங்களில் அரசியல் காட்சிகள் பிரமாதமாக இருக்கும்

இந்த நிலையில் சத்யராஜ் நடிக்கவுள்ள அடுத்த படம் இன்றைய அரசியல் நிகழ்வுகளை நையாண்டியாக தெரிவிக்கும் ஒரு படம் என்ற செய்தி வெளிவந்துள்ளது

சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் ஒரு நடிகன் அரசியலுக்கு வந்தால் ஏற்படும் விளைவுகளை நகைச்சுவையுடன் அலசுகிறது. இந்த படத்தை இயக்குனர் கடந்த 2004ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த ‘அடிதடி’ என்ற படத்தை இயக்கிய ஷிவ்ராஜ் எனபவர் இயக்கவுள்ளார்