ரஜினி,கமல் இருவரும் ஒரு வழியாக தங்களது அரசியல் பயணத்தை உறுதி செய்துள்ளனர். கமல் தனது முதல் அரசியல் மாநாட்டை இம்மாதம் துவங்க உள்ளார். ரஜினியோ ஏப்ரல் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் ரஜினி மற்றும் கமலை மக்கள் நம்பக் கூடாது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்..

திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா சைதாப்பேட்டையில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு நடிகர் சத்யராஜ் பேசியபோது,

நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்திகளாகி வருகின்றன. நடிகர்களுக்கு ஒரு பிரச்னைகளும் கிடையாது தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்து வைத்திருப்பார்கள். நான் கூட 3 தலைமுறைகளுக்கு தேவையானவற்றை சம்பாதித்து வைத்துள்ளேன்.

பிரபல நடிகர்கள் என்பதால் எல்லாம் தெரிந்தவர்கள் என்று அவர்களை ஒரு போதும் நம்பி விடாதீர்கள்.நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும் என்றார்.