ஜஸ்டிஸ் சத்யராஜ் ஷேம் சத்யராஜாக மாறியது எப்படி?

‘குசேலன்’ படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக தனது குருநாதர் கே.பாலசந்தருக்கு பாதிப்பு வரக்கூடாது என்ற எண்ணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களுக்கு முன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் சத்யராஜ் தன்மானத்தமிழர். ரஜினியை போல மன்னிப்பு கேட்க மாட்டார். அவர் பெரியாரின் உண்மைத்தொண்டன் என நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக சத்யராஜூக்காக வரிந்து கட்டினார். அவருக்காக #Justiceforsathyaraj என்ற ஹேஷ்டேக்கையும் டுவிட்டரில் ஏற்படுத்தி டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் எந்த கட்டாயத்தின் பேரிலோ தெரியவில்லை, சற்று முன்னர் சத்யராஜூம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டார். கடைசியில் நடிகனாக இறப்பதைவிட தமிழனாக இறப்பதில்தான் பெருமை என்றும் சினிமா வசனத்தையும் பேசினார்.

இந்த நிலையில் சத்யராஜின் திடீர் பல்டியால் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே கடுப்பில் அதே டுவிட்டரில் #Shameonyousathyaraj என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இப்போது அதையும் டிரெண்ட்டாகி வருகின்றனர்