மிஷ்கின் தயாரித்து நடித்துள்ள படம் சவரக்கத்தி. இந்த படத்தில் இயக்குநா் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு சரி இணையான ரோல் தான் நடிகை பூா்ணாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் வைத்ததுக்கே மிகப்பெரிய துணிவு வேண்டும். அப்படியொரு துணிவு உள்ள அந்த இயக்குநா் ஜி.ஆா்.ஆதித்யா வேறு யாருமில்லை நம்ம மிஷ்கினின் தம்பி தான்.

இந்த படத்தின் வெற்றிக்கு பூா்ணா 90% காரணம். மீதி 10% இயக்குநா் ராம் என்று மிஷ்கின் கூறினார். மேலும் அவா் இந்த படத்தில் நடிகை பூா்ணா சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஒரு மலையாள நடிகை இவ்வளவு அழகா தமிழில் டப்பிங் பேசியிருப்பது இது தான் பர்ஸ்ட் டைம் என்று நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் படம் முழுக்க நிறைய கெட்ட ர்த்தைகளை பேசியிருக்கிறார். அதுக்காக நிறைய மெனக்கிட்டு ட்ரெயினிங் எடுத்துக்கொண்டார். இப்படியாக மிஷ்கின் சொன்ன நிறைய விஷயங்கள் பூா்ணாவுக்கு பூா்ண கும்பம் வைக்காத குறைதான்.

இந்த படத்தில் முதலில் இந்த கேரக்டால் நடிக்க வைக்க நான்கு நடிகைகளிடம் அணுகியிருக்கிறார்கள். அவா்கள் எல்லாம் இந்த கதையை கேட்டவுடன் எகிறி குதிச்சு ஒடியிருக்கிறார்கள் போல. நல்லவேளையாக அவா்களை வைத்து இந்த படத்தை இயக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் படம் குட்டிச்சுவராக ஆகியிருக்கும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் மிஷ்கின்.

மேலும் அவா், கடவுளுக்கு அடுத்துப்படியாக அனைவரும் அண்ணாந்து பார்க்கிற ஒரு விஷயம் சினிமாவை தான் என்று பேசியதை எல்லாம் அரசியல்வாதிள் கேட்டால் இந்த சவரக்கத்தி படத்திற்கு தானாகவே பப்ளிசிட்டி கிடைத்து விடும். தற்போதைய நிகழ்வுக்கு சாமி கோபம் அடைகிறதோ என்று தெரியவில்லை ஆனால் சாமிக்காக ஆசாமிகளின் தான் அதிகமாக கோபப்படுகிற மாதிரி இருக்கிறது சினிமாவும், சினிமாக்காரா்களின் நிலைமை. என் படத்தை தியேட்டரில் தான் பாருங்க என்று சொல்ல மாட்டேன். தமிழ் ராக்கர்ஸும் ரிலீஸ் பண்ணுங்க. அவரவர் அவரவர் வேலையை பார்ப்போம் என்று கூறியுள்ளார்.