விஜயுடன் இணைகிறார் நடிகை சயீஷா!

சமீபத்தில் வெளிவந்த வனமகன் படத்தில் அறிமுகமானவர் நடிகை சயீஷா. முதல் திரைப்படம் என்றாலும் தன்னுடைய அற்புதமான நடிப்பினால் பல இயக்குனர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இவர். கவர்ச்சிக்கு மட்டுமே கதாநாயகிகள் எனும் வழக்கத்தை விரும்பாத இந்த நடிகை, மாறுபட்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறாராம்.

வனமகன் திரைப்படத்தில் இவரது நடிப்பில் மயங்கிய இயக்குனர் கோகுல் தன்னுடை அடுத்த படமான ‘ஜூங்கா’ திரைப்படத்தில் சயீஷாவை கதாநாயகியாக முடிவுசெய்துள்ளார். விஜய் சேதுபதி படத்தின் கதாநாயகன். இதற்கு தானே ஆசை பட்டைபாலகுமாராவிற்கு பிறகு இயக்குனர் கோகுலும் நடிகர் விஜய் சேதுபதியும் இணையும் இரண்டாவது திரைப்படம் இது.

நம்ம மாஸ் ஹீரோ விஜய் சேதுபதி இந்த படத்தில் டானாக நடிக உள்ளார். விக்ரம் வேதாவிற்கு பிறகு இந்த படமும் மக்களிடையே பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சயீஷா பாரிஸில் வளர்ந்த ஒரு பெண்ணாகவும், படத்தில் அவர் வரும் பெரும்பாலான காட்சிகள் பாரிஸில் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்க சயீஷாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், அவரது கதாபாத்திரம் மிகவும் வலிமையானது எனவும் சயீஷாவின் தாயார் கூறியுள்ளார். செப்டம்பர் மாத  இறுதியில் படபிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.