நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துள்ள சாயிஷா வெளியிட்டுள்ள புகைப்படம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ப்ளேபாயாக வலம் வந்த ஆர்யா, கடந்த மார்ச் மாதம் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர்கள் இருவரு இணைந்து ஊர் சுற்றிய புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு வந்தனர். அவர்கள் இருவரும் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டு குடும்பத்தினர் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஆர்யா - சாயிஷா திருமணம் - அபர்ணதி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

இந்நிலையில், சாயிஷா தனது இன்ஸ்டாகிராமில் அவரும், ஆர்யாவும் இணைந்து நிற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நீ + நான் = எனப்பதிவிட்டு ஹார்ட்டின் மற்றும் சில சிம்பிள்களை குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவர் கர்ப்பமாக இருப்பதைத்தான் இப்படி மறைமுகமாக தெரிவித்துள்ளார் என நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இதை ஆர்யாவோ, சாயிஷாவோ இன்னும் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

You + me= ❤️😍😘👰 @aryaoffl #nightout#hubzy#iloveyou

A post shared by Sayyeshaa (@sayyeshaa) on