தலைமை ஆசிரியர் மிது பாலியல் புகார் கொடுத்த மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமம் பெனில். இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவி ஜகான் ரபி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.

எனவே, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனையடுத்து அந்த பள்ளியில் சேர்ந்த சில மாணவர்களும், உள்ளூர் அரசியல்வாதிகளும் சேர்ந்து ஆசிரியரை விடிவிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். அந்த மாணவி பொய் புகார் கொடுத்ததாக கூறி வந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பின் தேர்வு எழுதுவதற்காக அந்த மாணவி பள்ளிக்கு சென்றார். அப்போது, அவரின் தோழி இருவர் அவரை பள்ளியின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார். அப்போது, பர்தா அணிந்து அங்கு வந்த 4 பேர் ஆசிரியர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு கூறினார். ஆனால், முடியாது என அந்த மாணவி மறுத்துவிட்டார்.

எனவே, மாணவி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசர் விசாரணை செய்து வருகின்றனர்.