அனைவரும் வியக்கும்படி வரலட்சுமி அப்படி என்ன செய்தார்?

varalaxmi

நடிகை வரலட்சுமி சமூக சேவைகளை அடிக்கடி செய்து வருபவர். பெண்களுக்காக சக்தி சேவ் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் சேவை மனப்பான்மையோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆற்றி வருகிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு குரல் கொடுத்தும் வருகிறார். நடிப்பதோடு நிற்காமல் இப்படி பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி தற்போது விஜய் நடித்து வரும் சா்கார் படத்திலும், சண்டைக்கோழி 2 படத்திலும் நடித்து வருகிறார். அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ரொம்பவும் கஷ்டமான கேரக்டரில் ரிஸ்க் எடுதது நடித்து ரசிகர்களின் மனத்தில் நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் புதிய படமொன்றில் வரலட்சமி சரத்குமார் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். மேலும் முழுக்க முழுக்க வித்தியாசமான வெல்வெட் நகரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தற்போது அவரது கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் பிசியாக இருக்கிறார்.

varalakshmisarathkumar

இப்படி பிசியான நேரத்திலும் கூட வரலட்சமி செய்துள்ள செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது செயலை பார்த்து அனைவரும் சமூக வலைத்தளத்தில் பாராட்டி ட்வீட் செய்துள்ளனர். அப்படி அனைவரும் வியக்கும்படி வரலட்சுமி என்ன செய்தார் தெரியுமா? படப்பிடிப்பை முடித்துவிட்டு வரலட்சுமி வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது அரசு பள்ளிசேர்ந்த மாணவர்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்த அவர், உடனடியாக தன்னுடைய காரை நிறுத்தி அந்த மாணவர்களை தன் காரில் ஏற்றி கொண்டு, அவரவர் வீட்டில் கொண்டு மாணவிகளை விட்டு விட்டு வந்த பின்பு தான் தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளராம்.

பள்ளி மாணவிகளுடன் சென்றபோது எடுத்துக்கொண்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்த மாணவிகளை பார்த்து பெருமை கொள்ளவதாகவும், இவர்கள் தினந்தோறும் பள்ளி கூடத்திற்க செல்வதற்கு 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவிகளை காரில் ஏற்றிக்கொண்டு அவரவர் வீட்டில் விட செல்வது மிகவும் சந்தோஷமாக உள்ளது. சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை என்று பதிவிட்டிள்ளார்.