சமந்தா பத்திரிக்கையாளராகவும் ஆதி இன்ஸ்பெக்டராகவும் நடித்து வெளிவந்திருக்கும் படம் யு டர்ன் இந்த படம் கன்னடத்தில் வெற்றி பெற்ற படம் இதை அப்படியே தமிழ், தெலுங்கில் மீண்டும் உருவாக்கி உள்ளனர்.

ரொம்ப நாளைக்கு பிறகு சூப்பர் மிரட்டல் திரைப்படம் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். உண்மையில் சீட்டின் நுனிக்கே வரவைக்கிறது எனவும் யாரும் எதிர்பாராத வித்யாச க்ளைமாக்ஸ் எனவும் சஸ்பென்ஸ், மற்றும் பேய்ப்பட விரும்பிகளுக்கு ஏற்ற அருமையான திரைப்படம் எனவும் விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பார்க்க முடிகிறது.

ஒரு யு டர்னில் திரும்புபவர்கள் தொடர் மரணங்கள் தான் படத்தின் கதை.

சமந்தாவின் திரையுலக பயணத்தில் இப்படம் ஒரு திருப்புமுனை எனவும் சொல்லப்படுகிறது.