பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம் படத்தில் நடித்தவர் பிரமிளா, அரங்கேற்றம் மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் பிரமிளா, அரங்கேற்றம் படத்தில் குடும்ப கஷ்டத்திற்காக தவறான தொழிலுக்கு செல்பவராக நடித்திருப்பார்.

விவேக்கை ஒரு நகைச்சுவை காட்சியில் பெட்ரூமில் படுக்க வைத்து தவறான காட்சியை எடுப்பர் அப்போ கூட என்னடா அரங்கேற்றம் பிரமிளா மாதிரி ஆக்கி வச்சுருக்கிங்க என்பார். அது போல் கவர்ச்சி காட்சிகளில் நடித்தவர் பிரமிளா.

இதையும் படிங்க பாஸ்-  12 மணி நேரத்தில் ஒரு மில்லியனை தொட்டது செம வெயிட்டு

மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

சில காலம் சினிமாவை தவிர்த்து விட்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் பிரமிளா அவரின் கணவர் அமெரிக்கர் என்பதால் அங்கு

லாஸ் ஏஞ்சலிலேயே குடியேறிவிட்டார். அமெரிக்க டாலர் நோட்டுகள் அச்சடிக்கும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக 25 வருடங்கள் வேலை பார்த்துள்ளார்
அச்சடித்த டாலர் நோட்டுகளை டிரக் மூலம் பாதுகாப்பாக வங்கிகளில் கொண்டுபோய் சேர்க்க கூடிய பணிதான் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதற்குப் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் பள்ளி இருக்கிறது. அதில், இரண்டு வருட பயிற்சி முடித்து, நுழைவுத்தேர்வில் ஜெயித்துள்ளார்.
துப்பாக்கியால் சுடுவதற்கு, டாலர் நோட்டுகளை எடுத்து செல்லும் டிரக்கை ஓட்டுவதற்கு, யாராவது டிரக்கை வழிமறித்தால் அட்டாக் செய்து கைதுசெய்வதற்கு எனப் பயிற்சி அளித்தார்கள். இத்துடன், ‘கிரிமினல் சட்டம்‘ மற்றும் ‘சிவில் சட்டம்’ படிக்க வேண்டும். இதில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். கை நிறையச் சம்பளம், விதவிதமான அனுபவம் எனச் சந்தோ‌ஷமாக இருந்ததாக கூறுகிறார்.
இப்போது ஓய்வு பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறார்.