கோலிவுட்டில் கடந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘சீமராஜா’. சிவகார்த்திகேயன் டபுள் ஆக்ஷனில் நடித்திருந்த இந்த படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் பொன்ராம் இயக்கியிருந்தார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, நெப்போலியன், சிம்ரன், லால் ஆகியோர் நடித்திருந்தனர். பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

‘24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். தற்போது, இப்படத்தை இதே பெயரில் தெலுங்கில் டப் செய்து வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதை உறுதிபடுத்தும் வகையில் தெலுங்கு வெர்ஷன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

 

_ சிவா விஷ்ணு