நாம் தமிழர் கட்சியின் சீமான் , சின்மயியின் பேச்சு குற்றச்சாட்டுக்கு மாற்று கருத்து தெரிவிக்கும் வகையில் பேசி இருக்கிறார். சுருக்கமாக சொன்னால் இது பிஜேபியின் செயல்பாடுகள் பிஜேபி செய்யும் வேலைதான் என பொருள்படும்படி மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறும் சில பாலியல் விவகாரங்களை பிஜேபியினர் தட்டி கேட்கவில்லை,சின்ன குழந்தை கோவிலுக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தல் நடந்த போதும் கூட இதை கேட்கவில்லை என கட்சி ரீதியாக பேசி, சின்மயியின் குற்றச்சாட்டு பொய் என்பது போல சீமான் பேசியுள்ளார்.

நடிகர் சித்தார்த் இந்த வீடியோவுக்கு தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.சிறுமனம் கொண்டவர்கள் என்றும், தவறான சிந்தனையற்ற முட்டாள்தனமான பேச்சு என்றும், சி.எஸ்.கே மேட்ச் நிறுத்தும் காகிதப்புலிகள் என கடுமையாக விமர்சித்துள்ளார் சித்தார்த். ஒரு  கருத்தில் வெட்ககேடு என குறிப்பிட்டுள்ளார் சித்தார்த்