சீமானின் கோபத்தில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடந்த சில நாட்களாக ரஜினி மீது காட்டமான விமர்சனத்தை வைத்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும் தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்றும் அவர் ஆக்ரோஷமாகவும், கோபமாகவும் கூறி வருகிறார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு திரைப்படத்தை சீமான் இயக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ‘கோபம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அறிமுக நடிகை ஒருவர் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்

அரசியல் மற்றும் ஆக்சன் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாகவும், அதில் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அடங்கியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.