தமிழகத்துக்கு வழங்கவேண்டிய 4 டிஎம்சி தண்ணீரை மே மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது உச்சநீதிமன்றம். ஆனால் இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வா் சித்தராமையா எங்களுக்கே தண்ணீா் இல்லை. அதனால் தமிழகத்திற்கு தண்ணீா் வழங்க இயலாது.

சித்தராமையாவின் இந்த பதிலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. கா்நாடக அரச தண்ணீர் தர இயலாது என திட்டவட்டமாக கூறியததை கேட்ட விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். அரசியல் கட்சி தலைவா்கள் சித்தராமையவின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கக் வேண்டியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றி அவா் கூறியதாவது, தண்ணீர் தர இயலாது என கூறும் கர்நாடகத்துக்கு நெய்வேலியிலிருந்து செல்லும் மி்ன்சாரத்தை உடனே நிறுத்த வேண்டும். தமிழர்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.