புதுக்கோட்டையில் உள்ளது தொண்டைமான் அரண்மனை. இங்குள்ள கல்லூரி கூட மன்னர்காலத்து கட்டிடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அரண்மனையின் சுற்றுச்சுவரில் மன்னர்காலத்து ஓவியங்கள் வரலாறுகள் ஓவியங்களாக தீட்டப்பட்டிருந்தன.

இந்த ஓவியங்களை அழித்து சீமராஜா படத்தின் விளம்பரங்கள் எழுதப்படுவது மக்களை வேதனையடைய செய்துள்ளது.புதுக்கோட்டை மக்கள் சிலர் மன்னர் காலத்து வரலாற்றை விளக்கும் வரலாற்று ஓவியங்களை இப்படி அழித்து விட்டு சீமராஜா பட விளம்பரத்தை எழுத அனுமதி கொடுத்தது யார் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில்  கொந்தளித்து வருகின்றனர்.