சிவகார்த்திகேயன் நடிப்பில் அனைவரையும் எதிர்பார்க்க வைத்திருக்கும் திரைப்படம் சீமராஜா. சமந்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு சூரி கியாரண்டி என்ற ரீதியில் மக்களை கலகலப்பூட்ட இப்படம் வரும் 13ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

சிம்ரன் வில்லியாக நடித்திருப்பதாலும் இதற்கு முன் பொன்ராம் கூட்டணியில் வந்த சிவாவின் படங்கள் மாஸ் என்பதாலும் இப்படமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்திற்காக ரோடு ஷோ என்ற வகையில் வண்டிகளில் சென்று மக்களிடம் விளம்பரம் செய்யும் வகையில் ரோடு ஷோ இன்று தொடங்கியது.

பயாஸ்கோப் என்ற பெயரில் இவ்வண்டிகள் தயாராகி உள்ளன.