விஜய்சேதுபதியை அடுத்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சீனுராமசாமி

11:00 காலை

விஜய்சேதுபதி நடித்த ‘தென்மேற்கு பருவக்காற்று, ‘தர்மதுரை போன்ற படங்களை இயக்கிய சீனுராமசாமி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக சீனுராமசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் என தெரிகிறது. உதயநிதி தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 18 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393