விளையாட்டு
கோலிக்கு அடுத்து தோனி: இங்கிலாந்து தொடரை வெல்ல சேவாக் ஆலோசனை!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்ல சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்.
இங்கிலாந்து சென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன், 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் இருபது ஓவர் போட்டி ஜூலை 3-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வீரேந்திர சேவாக், இந்திய அணி இந்த தொடரை வெல்ல சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
தினேஷ் கார்த்திக்கிற்குப் பதிலாக கே.எல்.ராகுலை அணியில் சேர்த்து அவரை 3-வது வீரராக களமிறக்க வேண்டும். இதனால் அவரிடமிருந்து இன்னும் அணிக்கு தேவையானவற்றைப் பெற முடியும். மேலும் தோனி தனது வழக்கமான இடமான வரிசையில் இறங்காமல் கோலிக்கு அடுத்தபடியாகக் களமிறங்க வேண்டும். இந்தமாதிரி பேட்டிங் ஆர்டரை மாற்றியமைத்தால் இந்திய அணியின் பேட்டிங் பலப்படும் என்றார்.
-
செய்திகள்3 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்1 day ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்5 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
செய்திகள்4 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…