நயன்தாரா நடித்த ‘நீ எங்கே என் அன்பே” என்ற படத்தை இயக்கியார் இயக்குனர் சேகர் கம்முலு. இவர் மீது ஸ்ரீரெட்டி என்ற நடிகை செக்ஸ் புகார் கூறியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுசிலீக்ஸ் போன்று ஆந்திர திரையுலகில் கடந்த சில நாட்களாக ஸ்ரீலீக்ஸ் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பட வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை வெளியிடவுள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் மிரட்டி இருந்தார். குறிப்பாக அவர் இயக்குனர் சேகர் கம்முலுவை மறைமுகமாக குற்றஞ்சாட்டியதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு குறித்து இயக்குனர் சேகர் கம்முலு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“பெண்களுக்கு சம உரிமை மற்றும் அவர்கள் மேம்பாட்டுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் என்னை அறிந்தவர்களுக்கும் இது தெரியும். என்னை குற்றம் சாட்டியவர்களை சும்மா விடுவதாக இல்லை. என்னை பற்றி பதிவிட்ட கருத்தை நீக்கி விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.”

இவ்வாறு சேகர் கம்முலு கூறியுள்ளார்.